இடுகைகள்

ஜூன், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

யானைகள் பற்றிய 21 ஆச்சரியமூட்டும் தகவல்கள்

படம்
  1 .உலகில் பல்லாயிரகணக்கான எண்ணிக்கையில் யானைகள் இருந்தாலும், அவை அனைத்தும் இரண்டு வகையை சேர்ந்தவை. ஒன்று ஆசிய யானைகள்; மற்றொன்று ஆஃப்ரிக்க யானைகள். 2 . பெண் ஆசிய யானைகளுக்கு தந்தம் இருக்காது. 3 . யானை பிறக்கும் போது சராசரியாக 200 பவுண்டுகள் எடை இருக்கும். இது 30 பிறந்த குழந்தைகளின் எடைக்கு சமமானது. 4 . ஆஃப்ரிக்க யானைகள்தான் நிலத்தில் வாழும் மிகப்பெரிய விலங்கு. 5 . யானைகளுக்கு பிடிக்காத ஒரு உயிரினம் 'தேனீ' 6 . மனிதனின் மொத்த உடலில் உள்ள சதையைவிட யானையின் தும்பிக்கையில் அதிக சதை உள்ளது. 7 . யானைகள் 22 மாதங்கள் கர்ப்பமாக இருந்து குட்டியை ஈன்றெடுக்கும். 8 . யானையின் தந்தம் ஒரு முறை உடைந்தால் மீண்டும் வளராது. 9 . உலக வனவிலங்கு நிதியத்தின் கணக்குப்படி, உலகில் இப்போது 4,15, 000 ஆஃப்ரிக்க யானைகள் உள்ளன. 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. 10. யானை இனம் சுமார் 5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு மெரிதீரியம் என்ற சிறு பன்றி போன்ற விலங்கிலிருந்து பரிணமித்தது. 11. நம்முடன் வாழும் யானைகள் பரிணமித்து சுமார் 30 இலட்சம் ஆண்டுகல் ஆகியிருக்கலாம் என தொல்லுயிரியலாளர்கள் கருதுகின...