கரடி பற்றிய 33 வியக்கவைக்கும் தகவல்கள்...
1. கரடி ஒரு ஊனுண்ணி, பாலூட்டி விலங்கு. 2. கரடி இனத்தைச் சேர்ந்த பனிக்கரடிகளும், கொடுங்கரடிகள் என்னும் பழுப்பு நிற கரடிகளும் ஊனுண்ணி பாலூட்டிகள், யாவற்றினும் மிகப் பெரியதாகும். 3. ஆசிய கரடி போன்ற சிறிய வகைக் கரடிகள் அனைத்துண்ணிகளாக உள்ளன. 4. துருவக் கரடிகள் பெரிய உருவத்தை கொண்டவை. பனி படர்ந்த துருவப் பகுதியில் எளிதில் கண்டுபிடிக்க முடியாத வகையில் வெண்மை நிறம் கொண்டவை. 5. எஸ்கிமோக்களின் மொழியில் "ஆர்க்டோஸ்" என்றால் கரடிகளின் பிரதேசம் என்று பெயர். இதனால் தான் வட துருவப் பகுதிக்கு "ஆர்க்டிக்" என்ற பெயர் வந்தது. 6. கரடிகள்" ஊர்சிடே" என்னும் குடும்பப் பிரிவில் உள்ளன. ஊர்சசு என்றால் லத்தீன் மொழியில் கரடி என்று பொருள். 7. ஆப்பிரிக்க கண்டத்திலும், ஆஸ்திரேலியாவிலும் கரடிகள் இல்லை. தென் அமெரிக்காவின் வடபகுதி மட்டும் சிறு நிலப்பரப்பில் சில வகைகள் வாழ்கின்றன. 8. கரடிகளின் கண்கள் சிறியதாக இருக்கும். குறைந்த பார்வைத் திறன் உடையவை. நல்ல மோப்பத் திறனும், கேட்கும் திறனும் கொண்டவை. 9. உடலில் அதிக முடிகளைக் கொண்டிருக்கும். இரண்டு கால்களினால் நிற்க வல்லவை. 10. கரடிகள் வேட்ட...