எருமை பற்றிய 23 சுவாரசியமான தகவல்கள்...
1. எருமை ஆப்பிரிக்கா மற்றும் வட அமெரிக்காவில் மட்டும் வாழ்கிறது. 2. இவை 8 அடி முதல் 9 அடி வரை உடலும், 2 முதல் 3 அடி வரை வால் இருக்கும். 3. இதன் எடை 1500 முதல் 2650 பவுண்டுகள் வரை இருக்கும். 4. எருமையின் தோல் பட்டை உயரம் 3.3 அடி முதல் 5.6 அடி வரை இருக்கும். 5. தலை மற்றும் உடல் நீளம் 5.6 அடி முதல் 11.2 அடி வரை இருக்கும். 6. இதன் வால் 28 முதல் 48 அங்குலம் வரை காணப்படும். 7. நீர் எருமைகள் ஆசியாவின் வெப்ப மண்டலம் மற்றும் துணை வெப்ப மண்டல காடுகளில் வாழ்கின்றன. 8. எருமைகள் பெரும்பாலும் தண்ணீரிலேயே இருக்கும். இவற்றின் கொம்புகள் அகலமாக காணப்படும். 9. ஆப்பிரிக்கா எருமை, புல்வெளிகள், சதுப்பு நிலங்கள், காடுகள் போன்ற இடத்தில் வாழும். இரவில் குளிர்ச்சியான பகுதிகளில் வாழ்வதற்கு விரும்புமாம். 10. எருமைகள் சமூக விலங்குகள் மற்றும் மந்தைகள் என்ற குழுக்கள் வாழ்கின்றன. 11. எருமைகள் தாவர வகைகளை சாப்பிடும். அதில் புல் , மூலிகைகளை விரும்பும். 12. எருமை ஒரு குட்டியை ஈன்றெடுக்க 9 மாதங்கள் முதல் 10 மாதங்கள் ஆகும். கன்று பிறந்தவுடன் நீர் எருமை அதனின் கன்றை 3 ஆண்டுகளுக்கு தன்னுடன் வைத்து கொள்ளும். ...