எருமை பற்றிய 23 சுவாரசியமான தகவல்கள்...
1. எருமை ஆப்பிரிக்கா மற்றும் வட அமெரிக்காவில் மட்டும் வாழ்கிறது.
2. இவை 8 அடி முதல் 9 அடி வரை உடலும், 2 முதல் 3 அடி வரை வால் இருக்கும்.
3. இதன் எடை 1500 முதல் 2650 பவுண்டுகள் வரை இருக்கும்.
4. எருமையின் தோல் பட்டை உயரம் 3.3 அடி முதல் 5.6 அடி வரை இருக்கும்.
5. தலை மற்றும் உடல் நீளம் 5.6 அடி முதல் 11.2 அடி வரை இருக்கும்.
6. இதன் வால் 28 முதல் 48 அங்குலம் வரை காணப்படும்.
7. நீர் எருமைகள் ஆசியாவின் வெப்ப மண்டலம் மற்றும் துணை வெப்ப மண்டல காடுகளில் வாழ்கின்றன.
8. எருமைகள் பெரும்பாலும் தண்ணீரிலேயே இருக்கும். இவற்றின் கொம்புகள் அகலமாக காணப்படும்.
9. ஆப்பிரிக்கா எருமை, புல்வெளிகள், சதுப்பு நிலங்கள், காடுகள் போன்ற இடத்தில் வாழும். இரவில் குளிர்ச்சியான பகுதிகளில் வாழ்வதற்கு விரும்புமாம்.
10. எருமைகள் சமூக விலங்குகள் மற்றும் மந்தைகள் என்ற குழுக்கள் வாழ்கின்றன.
11. எருமைகள் தாவர வகைகளை சாப்பிடும். அதில் புல் , மூலிகைகளை விரும்பும்.
12. எருமை ஒரு குட்டியை ஈன்றெடுக்க 9 மாதங்கள் முதல் 10 மாதங்கள் ஆகும். கன்று பிறந்தவுடன் நீர் எருமை அதனின் கன்றை 3 ஆண்டுகளுக்கு தன்னுடன் வைத்து கொள்ளும்.
13. நீர் எருமைகள் 25 ஆண்டுகளும், ஆப்பிரிக்க எருமைகள் 26 ஆண்டுகள் வரை வாழ்கின்றன.
14. காரான், மயிடம், கவரி என்பவை பெண் எருமையைக் குறிக்கும் தமிழ்ச் சொற்களாகும். பகடு, கட, ஆமா, கவயம் என்பன ஆண்பால் எருமையினைக் குறிக்கும் தமிழ்ச் சொற்களாகும்.
15. இந்திய நீர் எருமைகள் 5000 வருடங்களாக இந்தியாவில் உள்ளன. சைனாவின் நீர்காட்டு எருமைகள் 4000 வருடங்களாக சைனாவில் உள்ளன என்றும் அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
16. உலகம் முழுவதும் 172 மில்லியன் நீர் எருமைகள் இருப்பதாக கணக்கெடுப்புகள் கூறுகின்றன. அவற்றில் 95.8 சதவீதம் ஆசியாவில் காணப்படுகின்றன.
17. விவசாயம் மற்றும் பால் தவிர இவற்றின் கொம்புகளும் எலும்புகளும் அணிகலன்கள் செய்யப் பயன்படுகின்றன.
18. இந்தியாவின் கர்நாடக மாநிலம் கம்பாலாவில் நடக்கும் எருமைப் போட்டி பிரசித்தி பெற்றது.
தாய்லாந்து நாட்டிலும் எருமைப் போட்டி நடக்கிறது.
19. எருமையை தாக்கும் நோய்கள் ,எருமை அம்மை ,பிளாக் குவார்டர் ,சோன்சு நோய் ஆகியனவாகும்.
20. முர்ரா இன எருமைகளில் பால் உற்பத்திக் காலம் 262-295 நாட்கள் வரை ஆகும்.
21. இந்த முர்ரா இன எருமையின் தாயகம் இந்தியா என பெரும்பான்மையான பரிணாம மரபியல் ஆய்வுகள் கூறுகின்றன.
22.கொழுப்பு நிறைந்த பாலுக்காகவும், உழவுக்கும், போக்குவரவுக்கும் மிகவும் உதவிகரமாக இருக்கிறது.
23. ஆசிய எருமைகள் அதிகத் திறனுடன் உழைக்கக்கூடியவை. ஆசிய எருமைகள் ஆண்டொன்றுக்கு 45 மில்லியன் டன்கள் பால் உற்பத்தி தருகின்றன. அதில் 30 மில்லியன் டன்கள் இந்தியாவிலிருந்து மட்டும் பெறப்படுகிறது.





கருத்துகள்
கருத்துரையிடுக