கரடி பற்றிய 33 வியக்கவைக்கும் தகவல்கள்...
1. கரடி ஒரு ஊனுண்ணி, பாலூட்டி விலங்கு.
2. கரடி இனத்தைச் சேர்ந்த பனிக்கரடிகளும், கொடுங்கரடிகள் என்னும் பழுப்பு நிற கரடிகளும் ஊனுண்ணி பாலூட்டிகள், யாவற்றினும் மிகப் பெரியதாகும்.
3. ஆசிய கரடி போன்ற சிறிய வகைக் கரடிகள் அனைத்துண்ணிகளாக உள்ளன.
4. துருவக் கரடிகள் பெரிய உருவத்தை கொண்டவை. பனி படர்ந்த துருவப் பகுதியில் எளிதில் கண்டுபிடிக்க முடியாத வகையில் வெண்மை நிறம் கொண்டவை.
5. எஸ்கிமோக்களின் மொழியில் "ஆர்க்டோஸ்" என்றால் கரடிகளின் பிரதேசம் என்று பெயர். இதனால் தான் வட துருவப் பகுதிக்கு "ஆர்க்டிக்" என்ற பெயர் வந்தது.
6. கரடிகள்" ஊர்சிடே" என்னும் குடும்பப் பிரிவில் உள்ளன. ஊர்சசு என்றால் லத்தீன் மொழியில் கரடி என்று பொருள்.
7. ஆப்பிரிக்க கண்டத்திலும், ஆஸ்திரேலியாவிலும் கரடிகள் இல்லை. தென் அமெரிக்காவின் வடபகுதி மட்டும் சிறு நிலப்பரப்பில் சில வகைகள் வாழ்கின்றன.
8. கரடிகளின் கண்கள் சிறியதாக இருக்கும். குறைந்த பார்வைத் திறன் உடையவை. நல்ல மோப்பத் திறனும், கேட்கும் திறனும் கொண்டவை.
9. உடலில் அதிக முடிகளைக் கொண்டிருக்கும். இரண்டு கால்களினால் நிற்க வல்லவை.
10. கரடிகள் வேட்டையாடவும் ,எதிரிகளைத் தாக்கவும் , நீண்டு வளைந்திருக்கும் தங்கள் கூரான நகங்களை பயன்படுத்துகின்றன.
11. நகங்களில் சகதியும் அழுக்கும் சேர்ந்து இருக்கும். பாக்டீரியா மிகுந்திருக்கும். இதனால் இவற்றால் தாக்கபடுபவரின் காயங்கள் எளிதில் குணமடையாது.
12. சராசரியாக நான்கடி உயரமும், 115 கிலோ எடையும் கொண்ட கரடிகள் தோலுக்காகவும், மருத்துவ குணம் கொண்டதாக கருதப்படும் அவற்றின் கணையத்திற்காகவும் வேட்டையாடப்படுகின்றன.
13. இவற்றின் கர்ப்பக்காலம் ஏழு மாதங்கள். குளிர் மிகுந்த பகுதிகளில் வாழும் கரடிகள் குளிர் காலம் முழுவதையும் ஆழ்ந்த உறக்கத்தில் கழித்து விடுகின்றனர்.
14. துருவப் பகுதியில் வாழும் கரடிகள் பல மாதங்கள் இப்படி உறங்கும் தனித்துவமான தன்மை கொண்டவை. அவ்வாறு உறங்கும் போது அவற்றின் உடலில் இருக்கும் சக்தி விரயம் ஆகாமல் இருப்பதற்காக இவற்றின் இதயத் துடிப்பு மிகவும் குறைந்துவிடும்.
15. இவ்வாறு சுய நினைவு இல்லாமல் இருக்கும் நிலையில் இவை குட்டிகளை ஈனுகின்றன. துருவக் கரடிகள் ஒரு முறையில் ஒன்றிலிருந்து மூன்று குட்டிகள் வரை போடும்.
16. கரடிகள் ஒரு காலத்தில் ஓநாய் மற்றும் நாய் அத்துடன் இணைந்து இருந்தவை என்று புதை படிவங்கள் மூலம் நிரூபணமாகியுள்ளது
17. கரடிகள் மனிதர்களை விடவும் தாவரவியல் அறிவு மிகுந்தவை. எந்தப் பருவத்தில் எந்த வகைக் கனிகள் எங்கே கிடைக்கும் என்பதை அறிந்து வைத்திருக்கும்.
18. நாவல் பழத்தை மிகவும் விரும்பி உண்ணும். மரங்களின் உச்சிவரை எளிதில் ஏறக்கூடியவை.
19. மிகப் பிடித்த உணவு தேன். மலை முகடுகளிலும், மரங்களிலும் உள்ள தேன் கூடுகளை கைப்பற்றும்.
20. கரடியின் மற்றொரு உணவு கரையான். காடுகளில் காணப்படும் கரையான் புற்றுகளை சுற்றி வந்து கொண்டிருக்கும். கரையான் புற்றில் வாய் வைத்து மிகுந்த ஓசையுடன் வாக்குவம் கிளீனர் தூசுகளை உறிஞ்சுவது போல், கரையான்களை அப்படியே உறிஞ்சி விடும்.
21. பாண்டா கரடிகள் " பெரிய கரடி பூனை" எனப்படுகின்றன.
22. கரடிகளை பிடித்து, சங்கிலிகளால் கட்டி, வித்தை காட்டி பணம் சம்பாதிக்கும் வழக்கும் பீகார் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் காணப்படுகிறது.
23. விலங்கினங்களில் கொழுப்புச் சத்து மிகவும் அதிகமாக உள்ள விலங்கு கரடி .
24. வானவியலில்" பெருங்கரடி (Great Bear) "என்பது முக்கியமான ஒரு நட்சத்திரக் கூட்டத்தின் பெயர். இந்த நட்சத்திரக் கூட்டத்தின் முழுமையான வடிவம் ஒரு கரடியின் வடிவத்தை ஒத்து இருப்பதாக கருதப்பட்டதால் இப்பெயர் வழங்கப்பட்டது.
25. கரடி ராமாயணத்திலும், மகாபாரதத்திலும் ஜாம்பவான் என்று குறிப்பிடப்படுகிறது.
26. சில ஆசிய இனக் கரடிகள் மரங்களில் கூடு கட்டுகின்றன.
27. மூங்கில் குருத்தையே உண்டு வாழும் பான்டா கரடி, தினமும் 12 மணி நேரத்தை சாப்பிடுவதற்குச் செலவழிக்கின்றது.
28. இதன் குட்டிகள் தாயின் அளவில் 1/900 தான் இருக்கும் என்பது பெரிய ஆச்சரியம். பிறக்கும்போது இதன் எடை சுமாராக 100 கிராமாக இருக்கும்.
29. உலக நாடுகளெங்கும் ஒரு காலத்தில் காணப்பட்டவை தான் பிரவுன் கரடிகள். தற்பொழுது ஐரோப்பிய, ஆசிய,அமெரிக்க கண்டங்களில் காணப்படுகின்றன. ரஷ்யாதான் அதிக கரடிகளைக் கொண்டுள்ளது.
30. black bear என்று சொல்லப்படும் ஓர் இனம் பெயருக்கேற்ற கறுப்பு நிறத்தில் மட்டுமன்றி, பிரவுன், நீலம் பாரித்த சாம்பல் நிறம், வெள்ளை, என்று தம் வாழும் சூழலுக்கு ஏற்ற நிறத்தில் காணப்படுகின்றன.
31. பூமியின் வட அரைக்கோளத்தில் தான் ஏறத்தாழ எல்லா இனக் கரடிகளும் காணப்படுகின்றன. ஆனால் ஒரேயொரு இனமான Andean (spectacled) bear தென் அமெரிக்காவின் அன்டீஸ் மலைத்தொடர் பகுதியில் மாத்திரமே காணப்படுகின்றது.
32. முகத்தில் கண்ணாடி அணிந்திருப்பது போன்ற அடையாளம் கொண்டிருப்பதால் spectacled bear என்று பெயர். வெனிசூலா, பொல்வியா, அர்ஜென்டீனா நாடுகளின் சில பகுதிகள் இவை வாழும் பகுதிகளில் உள்ளடங்குகின்றன.
33. தன் நெஞ்சுப் பகுதியில் உதயசூரியன் கோல அடையாளத்தைக் கொண்டுள்ளதுதான் sun bear கரடி. இனத்தில் மிகச் சிறியவர் இவர்தான். இவற்றின் உடல் உறுப்புகள் மருத்துவத்திற்கு பயன்படுவதால், சீனாவில் இவை வேட்டையாடப்படுவது அதிகம்.
நன்றி...




கருத்துகள்
கருத்துரையிடுக