எலிகள் பற்றிய சுவாரசியமான உண்மைகள்

 


1. எலிகளின் பல நூறு வகைகள் இருக்கின்றன. அதில் வெறும் 56 வகை எலிகள் தான் மக்கள் வாழும் இடத்தில் வாழ்கின்றன.

2. மற்ற வகைகள் அடர்ந்த மழை காடுகள் மற்றும் சதுப்பு நிலங்களில் வாழ்ந்து வருகின்றன

3. ஐந்து வாரங்களுக்குள், ஒரு எலி முதிர்ச்சியடைந்து குட்டிகளைப் பெற்றெடுக்க முடியும்.

4. ஆறு மணி நேரத்திற்குள் எலிகள் நூற்றுக்கணக்கான முறை உடலுறவு கொள்கின்றது என கண்டறியப்பட்டுள்ளது.

5. தாய் எலி ஒரு நேரத்தில் 6 முதல் 20 இளம் குட்டிகளை பெற்றெடுக்கிறது

6. 50 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தாலும் அடிப்படாத படி லாவகமாக லேண்டிங் ஆகும் திறன் எலிகளுக்கு இருக்கிறது.

7. இதுவரை எலிகள் சார்ந்த ஆராய்ச்சி மேற்கொண்டதற்கு 30 நோபல் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன.

8. கடந்த 200 ஆண்டுகளாக மனிதர்களுக்காக தயாரிக்கப்படும் மருந்துகள் எலிகள் மீது தான் பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன.

9. எலிகளுக்கு பித்தப்பை மற்றும் சிறுநாக்கு கிடையாது. ஆனால், மனிதர்களை போல தொப்புள் இருக்கிறது.

10. எலிகளின் முன் பற்கள் வருடா வருடம் 4 1/2 இருந்து 5 1/2 இன்ச் வரை வளரும். இதை குறைக்க தான் எலி எதையாவது கொறித்து கொண்டு இருக்குமாம்.

11. ஒரு எலியின் சராசரி வாழ்நாள் 2-3 வருடங்கள்.

12. 2-3 நாட்கள் வரையிலும் கூட எலி நீரில் தாக்குப்பிடிக்க முடியும். அமெரிக்காவில் ஒரு மனிதனுக்கு ஒரு எலி விகிதத்தில் எலிகளின் எண்ணிக்கை இருக்கிறது.

13. எலிகள் தங்கள் மல களிவுகளையே உண்ணும். இதன் மூலமாக அவை தனக்கு தேவையான சத்துக்கள் பெறுகின்றனவாம்.

14. எலிகளுக்கு வியர்காது. அவை தனது இரத்த நாளங்கள் மற்ற வாலை பயன்படுத்தி உடல் வெட்ப நிலை சீராக்கி கொள்ளும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நண்டுகள் பற்றிய 12 அருமையான உண்மைகள்...

சிம்பன்சி பற்றிய வியக்கவைக்கும் தகவல்கள்...