யானைகள் பற்றிய 21 ஆச்சரியமூட்டும் தகவல்கள்
1.உலகில் பல்லாயிரகணக்கான எண்ணிக்கையில் யானைகள் இருந்தாலும், அவை அனைத்தும் இரண்டு வகையை சேர்ந்தவை. ஒன்று ஆசிய யானைகள்; மற்றொன்று ஆஃப்ரிக்க யானைகள்.
2. பெண் ஆசிய யானைகளுக்கு தந்தம் இருக்காது.
3. யானை பிறக்கும் போது சராசரியாக 200 பவுண்டுகள் எடை இருக்கும். இது 30 பிறந்த குழந்தைகளின் எடைக்கு சமமானது.
4. ஆஃப்ரிக்க யானைகள்தான் நிலத்தில் வாழும் மிகப்பெரிய விலங்கு.
5. யானைகளுக்கு பிடிக்காத ஒரு உயிரினம் 'தேனீ'
6. மனிதனின் மொத்த உடலில் உள்ள சதையைவிட யானையின் தும்பிக்கையில் அதிக சதை உள்ளது.
7. யானைகள் 22 மாதங்கள் கர்ப்பமாக இருந்து குட்டியை ஈன்றெடுக்கும்.
8. யானையின் தந்தம் ஒரு முறை உடைந்தால் மீண்டும் வளராது.
9. உலக வனவிலங்கு நிதியத்தின் கணக்குப்படி, உலகில் இப்போது 4,15,000 ஆஃப்ரிக்க யானைகள் உள்ளன. 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன.
10. யானை இனம் சுமார் 5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு மெரிதீரியம் என்ற சிறு பன்றி போன்ற விலங்கிலிருந்து பரிணமித்தது.
11. நம்முடன் வாழும் யானைகள் பரிணமித்து சுமார் 30 இலட்சம் ஆண்டுகல் ஆகியிருக்கலாம் என தொல்லுயிரியலாளர்கள் கருதுகின்றனர்.
12. காட்டு யானைகள் தமது வாழ்க்கையின் அதிக நேரத்தை உணவு தேடி அலைவதில் செலவிடும். ஒரு நாளில் சுமார் 18 மணி நேரத்தை இதற்காக செலவிடும்.
13. நாள் ஒன்றுக்கு 100 முதல் 300 கிலோ தாவரங்களை உண்ணும். 100 முதல் 150 லிட்டர் தண்ணீர் யானைக்கு தேவைப்படுகிறது.
14. ஆசிய யானைகள் ஆப்பிரிக்க யானைகளை விட சிறியதாக உள்ளன. அதிகபட்சம் 11 அடி உயரமும், 6 ஆயிரம் கிலோ இருக்கும்.
15. ஆசிய யானை இனத்தில் இந்திய யானை, இலங்கை யானை, சுமத்திரா யானை, போர்னியோ யானை ஆகிய 4 சிறப்பினங்கள் உள்ளன.
16. தற்போது யானைக் குடும்பத்தில் ஆசிய யானை, ஆப்பிரிக்க புதர்க் காட்டு யானை, அடர் காட்டு யானை ஆகிய 3 இனங்கள் உள்ளன.
17. யானைகள் அதிகபட்சமாக மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் நடக்க முடியும். சாதாரணமாக மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நடக்கும்.
18. யானைகளுக்கு பார்வை சக்தி குறைவே. சுமார் 50 அடிகளுக்கு அப்பால் எதுவும் தெளிவாக தெரியாது
19. ஆசிய, ஆப்பிரிக்க யானைகள் இரண்டும் மொத்தம் 26 பற்களை பெற்றுள்ளன.
20. யானைகள் கூட்டமாக நாடோடிகளாக வாழும் இயல்பு கொண்டது. 15 முதல் 50 வரையிலான யானைகள் கூட்டமாக வாழும் பழக்கம் உள்ளவை.
21. யானைகள் நன்றாக நீச்சலடிக்கும் திறமை கொண்டவை. ஆறு, கடல் ஆகியவற்றை கடந்து நீந்திச் செல்ல முடியும்.
.jpg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
கருத்துகள்
கருத்துரையிடுக