தசைகளுக்கு வலிமை தரும் 10 இயற்கை உணவுகள்!

முட்டை

நாம் சாப்பிடும் ஒவ்வொரு முட்டையிலிருந்தும் 6-ல் இருந்து 8 கிராம் வரையிலான புரதச் சத்து (புரோட்டின்) கிடைக்கிறது. 9-க்கும் மேற்பட்ட அமினோ அமிலங்கள் உள்ளன. மேலும் முட்டையில் வைட்டமின்கள், இரும்புச்சத்து மற்றும் கால்சியம், துத்தநாகம் போன்ற தாதுசத்துகளும் நிறைவாக உள்ளன. இவை அனைத்தும் உடல் வலுப்பெற உதவுகிறது.
இறைச்சி

100 கிராம் கோழி இறைச்சியில் (கோழியின் நெஞ்சுப்பகுதி) 30 கிராம் புரதச்சத்து உள்ளது. இவை செல்களின் தேய்மானத்தைக் குறைத்து புதுப்பிக்க உதவுவதோடு, இது உடல் தசைகளுக்கு வலு சேர்க்கிறது.
தண்ணீர்

நம் உடலில் 70 சதவிகிதம் தண்ணீர் உள்ளது. அதேபோல, தசை திசுக்கள் 75 சதவிகிதம் தண்ணீரால் ஆனதாகும். எனவே தினமும் சரியான அளவு தண்ணீர் குடிக்க வேண்டியது தசையின் வலிமைக்கும், வளர்ச்சிக்கும் இன்றியமையாதது. இல்லையென்றால் நீர்வறட்சி ஏற்படும். இதனால் உடலின்  வளர்ச்சிதை மாற்றத்தில் ஏற்படும் பாதிப்பால் தசை வலிமை குறைய வாய்ப்பு உள்ளது. எனவே போதுமான அளவு தண்ணீர் குடிப்பது தசையின் வலிமைக்கு உதவும்.

மீன் எண்ணெய்
மீன் எண்ணெயில் தசை வளர்ச்சிக்குத் தேவையான ஆன்டி-இன்ப்ளாமிட்டரி (anti-inflammatory)  அதிக அளவில் உள்ளது. இவை உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை (Metabolism) ஊக்குவிக்கும். இதனால் உடலின் தேவையில்லாத கொழுப்புகள் குறைவதோடு, வலிமையான தசைகள் உருவாக உதவும்.
ஓட்ஸ்

இதில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, புரதச்சத்து, தாதுப்பொருட்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைவாக உள்ளதால் தசை வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். உடற்பயிற்சி செய்ததும் எடுத்துக் கொள்ள வேண்டிய சிறந்த உணவாகும் இது.
பசலைக்கீரை

பசலைக்கீரையில் உள்ள  பைட்டோசிடை ஸ்டீராய்டு (Phytoecdysteroids) என்ற வேதிப்பொருள் 20 சதவிகித தசை வளர்ச்சிக்கு உதவுவதாக, அமெரிக்காவில் உள்ள ரட்கர்ஸ் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
அன்னாசிப்பழம்

அன்னாசிப்பழத்தில் (Pineapple) ப்ரோமெலைன் (Bromelein) என்னும் என்சைம் உள்ளது. இது தசைகளில் ஏற்படும் வீக்கத்தை குறைப்பதுடன், தசை வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. உடற்பயிற்சிக்குப் பிறகு இதைச் சாப்பிடுவது நல்லது.
வாழைப்பழம்

வாழைப்பழத்தில் உள்ள ப்ரோமெலைன் (Bromelein) ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க உதவும். உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகமானால், அது தசை வளர்ச்சிக்கு உதவும்.
புரோக்கோலி
புரோக்கோலியுடன் தக்காளி, மக்காச்சோளம், மிளகு சேர்த்து சாலட்டாகச் சாப்பிடலாம். இதில் உள்ள வைட்டமின்-சி தசை திசுக்களின் ஆயுளை கூட்டும். நார்ச்சத்து, தாதுச்சத்துகளும் இதில் அதிகளவு உள்ளன. இவை தசை வளர்ச்சிக்கு உதவும்.
பாதாம்


பாதாம்பருப்பில் கொழுப்புச்சத்து, புரதம், வைட்டமின்-இ, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைவாக உள்ளன. இவை தசை வளர்ச்சிக்கு ஊட்டமளிப்பதோடு, வலிமைபெறவும் பெரிதும் உதவுகின்றன. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எலிகள் பற்றிய சுவாரசியமான உண்மைகள்

நண்டுகள் பற்றிய 12 அருமையான உண்மைகள்...

சிம்பன்சி பற்றிய வியக்கவைக்கும் தகவல்கள்...