ஜப்பான் பற்றிய மிரள வைக்கும் உண்மைகள்!

                              ஜப்பான்




1.ஜப்பான் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் :
6,800 கும் மேற்பட்ட தீவுகளை உள்ளடக்கிய நாடு ஜப்பான் ஆகும்.


2.ஜப்பானின் மொத்த மக்கள் தொகை 127 மில்லியன் ஆகும்.

3.உலகிலேயே அதிக வயதுகள் வாழும் மனிதர்கள் கொண்ட நாடுகள் பட்டியலில் ஜப்பான் மூன்றாவது இடத்தில் உள்ளது.
சராசரியாக ஜப்பானிய ஆண்கள் 81 வயது வரையிலும், ஜப்பானிய பெண்கள் 88 வயது வரையிலும் வாழ்கிறார்கள்.

4.ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 1500 க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் ஜப்பானில் உருவாகின்றன.

5.ஜப்பானியர்கள் தங்கள் குழந்தைகளை விட செல்லப்பிராணிகளை அதிக எண்ணிக்கையில் வளர்க்கிறார்கள்

6.ஜப்பான் நாட்டின் பெரும்பாலான பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் தங்களது சுற்றுவட்டாரத்தை தாங்களே தூய்மைப்படுத்துவது என்பது கல்வித் திட்டத்தின் ஒரு அங்கமாக உள்ளது.

7.பள்ளிகளில் உள்ள கழிவறைகள், வகுப்பறைகள் மற்றும் பள்ளியை சுற்றி உள்ள எல்லா பகுதிகளைமாணவர்களே தூய்மை செய்கிறார்கள்.

8.ஜப்பானிய இளைஞர்களில் கிட்டத்தட்ட அனைவருமே கல்வியறிவு பெற்றவர்கள் ஆவார்கள்.

9.நம்ம ஊரில் கருப்பு நிற பூனைகளை பார்ப்பது அபசகுனமான ஒரு விஷயமாக பார்கப்படுகிறது,ஆனால் ஜப்பான் நாட்டில் கருப்பு நிற பூனைகள் அதிர்ஷ்டத்தின் ஒரு அடையாளமாகவே உள்ளது.

10.உலகிலேயே மிகப்பெரிய நகரமான டோக்கியோ நகரம் ஜப்பானில் தான் உள்ளது.

11.ஜப்பானுக்கு அடுத்தபடியாக ஜப்பானியர்கள் அதிகம் வாழும் நாடாக பிரேசில் நாடு உள்ளது.

12.பெரும்பாலான ஜப்பானியர்கள் ஷின்டோ என்ற மதத்தை பின்பற்றுபவர்களாக இருக்கிறார்கள்.

13.ஜப்பானில் டால்பின்கள் மற்றும் குதிரை மாமிசங்கள் உணவாக சாப்பிடப்படுவது மிகவும் சாதாரணமான ஒரு விஷயமாக உள்ளது.

14.ஜப்பான் நாட்டு மக்கள் '4' எண்ணை அதிர்ஷ்டமற்ற ஒரு எண்ணாக கருதுகிறார்கள்.

15. 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஜப்பானியர்கள் பயன்படுத்தும் செல்போன்கள் நீர் புகாத செல்போன்களாக உள்ளன. இதற்கு காரணம் குளிக்கும்போது கூட செல்போன்களை பயன்படுத்துபவர்களாக பெரும்பாலான ஜப்பானியர்கள் இருக்கிறார்கள்.

16.உலகில் பல்வேறு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளை கவரும் அனிமேஷன் கார்டூன் தொடர்கள் ஜப்பானில் தயாரிக்கப்பட்டவை ஆகும்.

17.ஜப்பானில் பொது இடங்களில்,சாலைகளில் புகைப்பிடிப்பது தடை செய்யப்பட்ட ஒரு செயலாகும். புகை பிடிப்பதற்கு என்றே ஜப்பானின் பல பகுதிகளில் தனியாக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

18.ஜப்பானில் உணவு பொருட்கள் முதல் பாலியல் சம்பந்தப்பட்ட பொருட்கள் வரை பெரும்பாலான ஜப்பானியர்கள் வென்டிங் மெஷின்கள் என்ற இயந்தரங்களின் மூலமாகவே வாங்குகிறார்கள் .

19.நம்ம ஊரில் பெட்டிக்கடைகள் நிரம்பியுள்ளது போல ஜப்பானில் மில்லியன் கணக்கான வெண்டிங் மெஷின்கள் நிரம்பியுள்ளன.

20.ஜப்பானின் குற்றச்செயல்கள் அவ்வப்போது நடைபெற்றாலும், உலக அளவில் பார்க்கும்போது குற்றங்களின் விகிதம் ஜப்பானில் மிகவும் குறைவாகவே உள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எலிகள் பற்றிய சுவாரசியமான உண்மைகள்

நண்டுகள் பற்றிய 12 அருமையான உண்மைகள்...

சிம்பன்சி பற்றிய வியக்கவைக்கும் தகவல்கள்...