குதிரை பற்றிய 23 சுவாரசியாமான உண்மைகள்.
1. குதிரை பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு தாவர உண்ணி ஆகும்.
2. இவை உலகில் சுமார் 50 மில்லியன் ஆண்டுகளாக வாழ்கின்றன.
3. குதிரையின் பிறப்பிடம் வட அமெரிக்கா ஆகும். அதன் பின்னர் ஆசியா மற்றும் ஐரோப்பா முழுவதும் பரவியது.
4. இவை கி.மு. 4000 ஆண்டுக்கு முன்பே மனிதனால் பழக்கப்படுத்தப்பட்டு வளர்க்கப்பட்ட ஒரு விலங்கு.
5. குதிரையில் இன்றைய நிலையில் சுமார் 400 இனங்கள் உள்ளன.
6. குதிரைகள் பொதுவாக 25 முதல் 30 ஆண்டுகள் ஆயுள் காலத்தைக் கொண்டுள்ளது.
7. குதிரையின் குட்டிகள் பிறந்த உடனடியாக எழுந்து ஓடும் அளவிற்கு சக்தியை கொண்டுள்ளன.
8. குதிரைகளின் கருக்காலம் 335 முதல் 340 நாட்கள் ஆகும். அதாவது தோராயமாக 11 மாதங்கள் தங்களின் குட்டிகளை கருவில் சுமக்கின்றன.
9. பொதுவாக குதிரைகள் நின்று கொண்டே தூங்கும் திறன் கொண்டவை. நள்ளிரவில் மட்டும் படுத்துறங்கும் வழக்கம் கொண்டது.
10. பிறந்து மூன்று மாதங்கள் வரை ஒரு நாளில் பாதி அளவு நேரம் குட்டி குதிரைகள் உறக்கத்திலேயே இருக்கின்றன.
11. குதிரையின் வாயில் நாள் ஒன்றுக்கு 40 லிட்டர் அளவு உமிழ்நீர் சுரக்கிறது. இது உணவை எளிதில் மென்று விழுங்க செய்கிறது.
12. ஆண் குதிரைகளின் வாயில் 40 பற்களும், பெண் குதிரைகளின் வாயில் 36 பற்களும் உள்ளது.
13. குதிரையின் மேல் தாடை கீழ் தாடையை விட அகலமாக இருக்கும்.குதிரைகளின் வயதை அதன் பற்களை கொண்டு கணக்கிட முடியும்.
14. நல்ல கவனிப்புடன் வளர்க்கப்படும் குதிரைகள் 30 வயது வரை வாழ்கின்றன. மற்ற குதிரைகள் பெருகுடல் பிரச்சனை, நோய் போன்ற காரணங்களால் விரைவில் இறந்துவிடுகின்றன.
15. குதிரைகள் மந்தையான வாழ்க்கை முறை கொண்டுள்ளது.தனியாக இருக்கும் குதிரைகள் மன அழுத்தத்திற்கு ஆளாகிறது.
16. வெள்ளை நிற குதிரைகள் பிறக்கையில் சாம்பல் நிறமாகவே இருக்கிறது. அது வளரும் போது, வெள்ளை நிறமாக மாறுகிறது. அதில், சில குதிரைகள் பிறக்கையில் கறுப்பு நிறம் போலவும் தோன்றும்.
17. சராசரியாக குதிரைகளுக்கு நிமிடத்திற்கு 32 முதல் 36 முறை இதயம் துடிக்கிறது. சில குதிரைகளுக்கு 24 முறையும் சில குதிரைகளுக்கு 40 முறையும் துடிக்கிறது.
18. குதிரைகள் மோனோகுலர் பார்வை கொண்டுள்ளது. இதன் மூலம் அவை வேட்டையாடுபவர்களை அடையாளம் காண்கின்றன. அவை ஆபத்தை விரைவாக உணர்ந்து தப்பிக்கின்றன.
19. குதிரைகள் தொலை தூரத்தில் உள்ள பொருட்களை எளிதில் கண்டறியும். ஆனால், ஒரு மீட்டருக்கு குறைவாக உள்ள தூரத்தில் இருக்கும் பொருட்களை அடையாளம் காண்பது அவற்றுக்கு மிக சிரமமாக இருக்கும்.
20. சராசரியாக ஒரு குதிரை 60 முதல் 62 அங்குலம் உயரம் வரை வளரும்.
21. குதிரையின் உடலில் சராசரியாக 205 எலும்புகள் உள்ளன. மனிதனுக்கும் இவற்றுக்கும் உள்ள ஒரு வேறுபாடு என்னவென்றால் குதிரைகளுக்கு காறையெலும்பு இல்லை.
22. குதிரைகளின் பார்வைத்திறன் சிறப்பானது. தரையில் வாழும் பாலூட்டிகளில் யாவற்றிலும் குதிரையின் கண்ணே பெரியது.
23. குதிரையின் முக்கிய குணங்களில் ஒன்று அதிகபட்ச வேகம். 88கிமீ வேகத்தில் ஓடும்.







கருத்துகள்
கருத்துரையிடுக