உலகின் சக்தி வாய்ந்த 10 விலங்கு...


10. பழுப்பு நிற கரடி - உலகின் மிகவும் பலம் வாய்ந்த விலங்குகளில் கரடியும் ஒன்று. இதனால் 500 கிலோ எடை வரை தூக்க இயலும். 



9. அனகோண்டா - இதன் அளவை விட பெரிய விலங்குகளை கூட வேட்டையாடும் சக்தி கொண்டது.


8. அமெரிக்க ஆக்ஸ் எருமை - இந்த காட்டெருமை தன்னை விட 1.5 மடங்கு எடையுள்ள ஒன்றை ஸ்தம்பிக்க செய்யும் திறன் கொண்டது.



7.யானை - இது தன் உடல் எடையை விட 1.5 மடங்கு அதிக எடையை தூக்கும் சக்தி கொண்டது.



6. புலி - இது கடிக்கும் விசை சுமார் 3700 பவுண்டுகள் இருக்கும். 550 கிலோ உள்ள இரையை இழுத்துச்செல்லும் சக்தி கொண்டது.



5. கழுகு - இது தன் எடையை விட 4 மடங்கு எடை கொண்ட இரையை தூக்கி செல்லும் வல்லமை கொண்டது.



4. கொரில்லா - தன்னை விட 10 மடங்கு எடையை தூக்கும் சக்தி கொண்டது. அதாவது சுமார் 2000 கிலோ.



3. இழை வெட்டு எறும்பு - தன் உடல் எடையை விட 50 மடங்கு அதிக எடையை தன் தாடைகளின் மூலம் சுமந்து செல்கிறது. இது ஒரு மனிதன் டிரக்கை தூக்கி சுமப்பதற்கு சமமானது.




2. காண்டாமிருக வண்டு - இந்த வண்டு தன் எடையை விட 850 மடங்கு அதிக எடை கொண்ட பொருளை சுமக்கும் சக்தி படைத்தது. 



1. சாணம் வண்டு - இந்த உயிரினம் தான் உலகின் மிகவும் வலுவான விலங்கு. இது தன் எடையை விட 1141 மடங்கு அதிக எடை கொண்ட பொருளை தள்ளிச்செல்ல முடியும்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எலிகள் பற்றிய சுவாரசியமான உண்மைகள்

நண்டுகள் பற்றிய 12 அருமையான உண்மைகள்...

சிம்பன்சி பற்றிய வியக்கவைக்கும் தகவல்கள்...