பூமி பற்றிய சுவாரசியமான தகவல்கள்
1. ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, நமது பூமி சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகள் பழமையானது.
2. 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமி உருவானபோது அது தோராயமாக 6 மணிநேரம் மட்டுமே. 620 மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு, நாள் இடைவெளி 21.9 மணிநேரம் ஆனது. இப்போது, கால அளவு 24 மணிநேரம்.
3. உலகின் மிகப்பெரிய மலைத்தொடர் மற்றும் மிகப்பெரிய சிகரம் இமயமலையின் எவரெஸ்டு என்று கூறுவோம் உண்மையில் இதுதான் மிகபெரிய மலைதொடரா என்று கேட்டால் கிடையாது உலகின் மிகபெரிய மலைத்தொடர் மோனாகியா இது ஹவாய் தீவில் காணப்படுகிறது இந்த மலைத்தொடரின் உயரம் 13,000 அடி எவரெஸ்ட் உயரம் கடல் மட்டத்தின் உயரம் 29,000 அடி உயரம் என்று கேட்பீர்கள். பாதி மலைப்பகுதி கடலுக்கு அடியில் உள்ளது இதன் மொத்த உயரம் 33,000 அடி ஆகும். நாம் அனைவரும் கடல் மட்டத்திலிருந்து உயரத்தை கணக்கிடுவதால் எவரெஸ்ட் இன்றுவரை உயரமாக உள்ளது.
4. ஒரு வருடத்தில் 365 நாட்கள் என்பது நாம் அறிந்ததே ஆனால் துல்லியமாக கூற வேண்டும் என்றால் 365.2564 நாட்கள் ஆகும் இந்த 2564 என்பது நான்கு வருடத்திற்கு ஒரு முறை லீப் ஆண்டாக பிப்ரவரி 29 அன்று ஒரு நாளாக மாறுகிறது. இதனால் தான் நான்கு ஆண்டுக்கு ஒரு முறை பிப்ரவரி 29 வருகிறது என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
5. நமது பூமியில் உள்ள குப்பைகளை பூமிக்கு வெளியே உள்ள குப்பைகள் அதிகம் எப்படி பூமிக்கு வெளியே குப்பை என்று கேட்டால் இதற்கு காரணம் செயற்கைகோள்கள் என்று கூறலாம் இந்த செயற்கைகோள் இயக்கம் நின்றவுடன் அப்படியே வின்வெளியில் குப்பையாக மாறிவிடும் இதைதான் SPACE DEBRIS என்று கூறுகின்றனர் . இவை நமது பூமியின் ஈர்ப்பு விசை காரணமாக ஈர்க்கப்பட்டு பூமியை சுற்றி வருகிறது. இப்படி பல்லாயிரகணக்கான குப்பைகள் விண்வெளியில் சுற்றுகின்றன.
6. இந்த உலகில் இருக்க கூடிய தண்ணீரில் வெறும் 3% மட்டுமே மனிதர்கள் பயன்படுத்தகூடிய நீராக உள்ளது மற்றவை அனைத்தும் கடல் நீராகவே உள்ளது.இந்த நீர் எப்படி பூமிக்கு வந்தது என்பது இன்றுவரை புரியாத புதிராகவே உள்ளது.

கருத்துகள்
கருத்துரையிடுக