சிங்கம் பற்றிய வியக்கவைக்கும் தகவல்கள்...
1. சிங்கம் என்பது பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு காட்டு விலங்கு ஆகும்.
2. தமிழில் ஆண் சிங்கத்திற்கு அரிமா என்ற பெயருண்டு.
3. ஆண் சிங்கம் 150-250 கிலோ வரை எடை கொண்டதாக இருக்கும். பெண் சிங்கம் 120-150 கிலோ கிராம் எடை கொண்டதாக இருக்கும்.
4. இவ்விலங்கு இன்று ஆப்பிரிக்காவிலும் இந்தியாவிலும் உள்ள காடுகளில் மட்டுமே காணப்படுகின்றது.
5. இதன் கர்ஜனை சுமார் 8 கிலோமீட்டர் (5 மைல்கள்) வரை கேட்கும் திறன் கொண்டது.
6. 1990களில் சிங்கங்களின் எண்ணிக்கை 100,000 வாக்கில் இருந்தும் இன்று ஏறத்தாழ 16,000-30,000 வரை உள்ளன.
7. ஆண் சிங்கங்களின் சராசரி ஆயுட்காலம் 12 வருடங்களும் பெண் சிங்கங்களின் சராசரி ஆயுட்காலம் 16 வருடங்களும் ஆகும்.
8. சிங்கப்புலி அல்லது லைகர் (Liger) என்பது ஆண் சிங்கம் (Panthera leo) மற்றும் பெண் புலி (Panthera tigris) இவைகளுக்கிடையே ஒரு கலப்பினச் சேர்க்கை மூலம் உருவாகிய கலப்பு உயிரினமாகும்.
9. சிங்கங்கள் இனப்பெருக்கத்தில் ஈடுபடும் போது, ஒரு நாளுக்கு 20 முதல் 40 முறை என இரண்டு நாட்கள் தொடர்ந்து ஈடுபடுத்தப்படும்.
10. பூனை குடும்பத்தில் இருக்கும் புலியில் இருந்து சிங்கம் வரை அனைத்து விலங்குகளுக்கும் இனிப்பை சுவைக்கும் திறன் கிடையாது. அதாவது, இனிப்பு ருசியை உணர முடியாதாம்.
11. சிங்கங்கள் "காட்டின் ராஜா" என்று அழைக்கப்பட்டாலும், ஆப்பிரிக்காவில் உள்ள சிங்கங்கள் உண்மையில் காட்டில் வாழ்வதில்லை. மாறாக, முதன்மையான அவர்களின் வாழ்விடங்கள் ஆப்பிரிக்காவின் புல்வெளிகள் மற்றும் சமவெளிகளைக் கொண்டிருக்கின்றன.
12. அவைகள் ஒரு நாளைக்கு 21 முதல் 22 மணி நேரம் தூங்கவும், ஓய்வெடுக்கவும், உட்கார்ந்து கொள்ளவும் செலவிடுகிறார்கள்.

கருத்துகள்
கருத்துரையிடுக